ஒடிசாவில் ஆட்சி அமைப்போம்: அடித்து சொல்கிறார் அமித்ஷா
ஒடிசாவில் ஆட்சி அமைப்போம்: அடித்து சொல்கிறார் அமித்ஷா
ADDED : மே 26, 2024 04:14 PM

புதுடில்லி: 'ஒடிசாவில் நாங்கள் ஆட்சி அமைப்போம். அங்கு, 17 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெறுவோம்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அமித்ஷா அளித்த பேட்டி: பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விரிவான ஆலோசனைக்கு பின், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் செலவுகளும் குறையும். ஒடிசாவில் நாங்கள் ஆட்சி அமைப்போம். அங்கு 17 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
இடஒதுக்கீடு
ராகுல் தோல்வியை மறைக்க, தந்திரமாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது குறை கூறுவார். காங்கிரஸ் உத்தரவாதங்களை ஒருபோதும் நிறைவேற்றாது. ஓபிசி இடஒதுக்கீட்டைக் காப்பது எங்கள் நோக்கம். பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் பா.ஜ.,வின் பலம் தான். நாங்கள் 400 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம். சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பிறகு, காஷ்மீரில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.