-295 டாக்டர்களுக்கு பதவி உயர்வு துணைநிலை கவர்னர் ஒப்புதல்
-295 டாக்டர்களுக்கு பதவி உயர்வு துணைநிலை கவர்னர் ஒப்புதல்
ADDED : நவ 20, 2024 10:37 PM
புதுடில்லி,:அரசு மருத்துவமனைகளில் 295 தலைமை டாக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்க துணைநிலை கவர்னர் சக்சேனா நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து, டில்லி கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூறியதாவது:
டில்லி அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 295 தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பதவி உயர்வை வழங்க துணைநிலை கவர்னர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த பதவி உயர்வு டில்லி சுகாதார சேவை - அலோபதி விதிமுறை 2009ன் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்னைகளைத் தீர்க்க, சரியான நேரத்தில் பதவி உயர்வு வழங்க 295 தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்க கவர்னர் நேற்று கையெழுத்திட்டார்.
அதேநேரத்தில், மகரிஷி வால்மீகி அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளருடைய பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால், அவருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
பதவி உயர்வுக்காக பரிசீலிக்கப்பட்ட 302 தலைமை டாக்டர்களில் 295 பேர் தகுதி பெற்றிருந்தனர். ஒருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. மற்ற 6 பேர் பதவி உயர்வுக்கு தகுதியற்றவர்களாக கருத்தப்பட்டனர்.