ADDED : நவ 09, 2024 03:37 AM

தட்சிணகன்னடா: தனக்கு நல்வாழ்வு அளித்ததால், தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமிக்கு, முதன் முதலாக வாங்கிய லாரியை பக்தர் ஒருவர் நேர்த்திக்கடனாக செலுத்தினார்.
தட்சிண கன்னடாவின், சித்தாபுராவைச் சேர்ந்தவர் நாகு குஷாலா. இவர் தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமியின் தீவிர பக்தர். எந்த வேலையை துவக்கினாலும், சுவாமியை நினைத்து துவங்குவார்.
கல்குவாரியில் கல் உடைக்கும் வேலை செய்து வந்த நாகு, 2000ல் தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமியை நினைத்து, முதன் முதலாக ஒரு லாரியை வாங்கினார். இதை வைத்து சொந்தமாக தொழில் துவங்கி, இன்று பெரிய தொழிலதிபராக உள்ளார்.
தற்போது இவரிடம் நான்கு லாரிகள், இரண்டு ஜே.சி.பி.,க்கள் உள்ளன. 24 ஆண்டுகளுக்கு முன்பு, தான் முதன் முதலாக வாங்கிய அதிர்ஷ்ட லாரியை, தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமியின் சேவைக்காக சமர்ப்பித்துள்ளார்.
லாரிக்கு பெயின்ட் அடித்து, தீபாவளி அன்று, தர்மஸ்தலாவுக்கு காணிக்கையாக செலுத்தினார்.