சி.ஏ.ஏ., சட்டத்தை மம்தா தடுக்க முடியாது: அமித்ஷா சவால்
சி.ஏ.ஏ., சட்டத்தை மம்தா தடுக்க முடியாது: அமித்ஷா சவால்
ADDED : மே 14, 2024 05:56 PM

கோல்கட்டா: சி.ஏ.ஏ., சட்டத்தை மம்தா பானர்ஜியால் ஒருபோதும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சபதம் விடுத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: 4 கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தம் 380 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. மேற்கு வங்கத்தில் 18 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. 270 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு முழுப்பெரும்பான்மை உடன் வெற்றி கிடைத்துள்ளது.
குடியுரிமை
அயோத்தி ராமர் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவுக்கு, மம்தா பானர்ஜி மற்றும் ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஏன் பங்கேற்கவில்லை. அவர்கள் தங்கள் ஓட்டு வங்கியை கண்டு பயப்படுகின்றனர். சி.ஏ.ஏ., சட்டத்தை மம்தா பானர்ஜியால் ஒருபோதும் தடுக்க முடியாது.
சிஏஏ சட்டத்தால், அனைவருக்கும் குடியுரிமை கிடைக்கும். மம்தா ஓட்டு வங்கி அரசியலுக்காக ஊடுருவலை ஆதரித்தார். இதனால் அவர் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

