ADDED : ஆக 28, 2024 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாபூர் தொகுதி பா.ஜ., வேட்பாளராக தனது மகன் அலோக்கை களம் இறக்க, பெங்களூரு எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் முயற்சி செய்தார். கடைசி நேரத்தில் முன்னாள் அமைச்சர் சுதாகருக்கு சீட் கிடைத்தது. அவர் வெற்றியும் பெற்றார். பின், கட்சி நடவடிக்கைகளில் இருந்து விஸ்வநாத் சற்று விலகி இருந்தார்.
இந்நிலையில், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில் துணை முதல்வர் சிவகுமாரை, விஸ்வநாத் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.
அதன் பின், வெளியே வந்த அவர் கூறுகையில், “என் மகள் திருமண பத்திரிகை கொடுக்க வந்தேன். என் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கும்படி, துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன்,” என்றார்.

