ADDED : ஆக 20, 2024 06:12 AM

பெங்களூரு: மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பழைய கறுப்பு, வெள்ளை படம் முதல்வரை வெகுவாக கவர்ந்தது.
பெங்களூரின், சித்ரகலா பரிஷத்தில் புகைப்பட கண்காட்சி நேற்று நடந்தது. பெங்களூரின் போட்டோ ஜர்னலிஸ்ட்கள் சங்கத்தின் சார்பில், இக்கண்காட்சி நடத்தப்பட்டது.
முதல்வர் சித்தராமையா, பணி நெருக்கடிக்கு இடையிலும், நேரம் ஒதுக்கி புகைப்பட கண்காட்சியை பார்க்க வந்தார். ஒவ்வொரு படத்தையும் உன்னிப்பாக கவனித்தார். அந்தந்த படத்தை பற்றி ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டார்.
கண்காட்சியில் இடம் பெற்றிருந்த தங்களின் படங்களை பற்றி, முதல்வரிடம் போட்டோ கிராபர்கள் விவரித்தனர்.
தனது படமும் இருப்பதை பார்த்து, முதல்வர் புன்முறுவல் பூத்தார்.
பல முக்கியஸ்தர்களின் அபூர்வமான படங்களும் இருந்தன. இது பற்றியும் தகவல் கேட்டறிந்தார்.
இந்த கண்காட்சியில், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பழைய கறுப்பு, வெள்ளை படத்தை முதல்வர் சித்தராமையா மிகவும் ஆர்வமாக பார்த்து ரசித்தார். இந்த படத்தை மட்டும் நீண்ட நேரம் பார்த்தபடி நின்றிருந்தார்.

