ஸ்ரீராமுலு தோற்றது வருத்தம் அமைச்சர் நாகேந்திரா பேட்டி
ஸ்ரீராமுலு தோற்றது வருத்தம் அமைச்சர் நாகேந்திரா பேட்டி
ADDED : ஜூன் 04, 2024 11:11 PM

பல்லாரி: ''பல்லாரியில் பா.ஜ., வேட்பாளர் ஸ்ரீராமுலு தோற்றது வருத்தம் அளிக்கிறது,'' என்று, அமைச்சர் நாகேந்திரா கூறினார்.
பழங்குடியினர் நல அமைச்சர் நாகேந்திரா, பல்லாரியில் நேற்று அளித்த பேட்டி:
பல்லாரியில் காங்கிரஸ் வேட்பாளர் துக்காராம், வெற்றி பெற்று உள்ளார். அவரது வெற்றிக்காக உழைத்த பல்லாரி, விஜயநகரா மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி. பல்லாரியில் இம்முறை, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று நினைத்தோம்.
அது நடந்து உள்ளது. துக்காராமை தவிர பல்லாரிக்கு சிறந்த வேட்பாளர் யாரும் இல்லை என்று நினைத்தோம். அது உண்மை என்று நிரூபித்து காட்டி உள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது, தர்மம், அதர்மம் பற்றி நான் பேசினேன். பா.ஜ., சித்தாந்தங்கள் எங்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் பல்லாரி பா.ஜ., வேட்பாளர் ஸ்ரீராமுலுவை தோற்கடித்து, அதர்மத்தை விரட்ட வேண்டும் என்று கூறினேன்.
ஆனால், தனிப்பட்ட முறையில், ஸ்ரீராமுலு தோற்றது எனக்கு வருத்தம் அளிக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலிலும் தோற்றார். வரும் நாட்களில் அவருக்கு நல்லது நடக்கட்டும். அவர் மீது எனக்கு அனுதாபம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.