sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரிமோட் கன்ட்ரோலில் ஆட்சி நடத்திய சோனியா

/

ரிமோட் கன்ட்ரோலில் ஆட்சி நடத்திய சோனியா

ரிமோட் கன்ட்ரோலில் ஆட்சி நடத்திய சோனியா

ரிமோட் கன்ட்ரோலில் ஆட்சி நடத்திய சோனியா

4


UPDATED : ஜூலை 04, 2024 03:57 AM

ADDED : ஜூலை 04, 2024 01:23 AM

Google News

UPDATED : ஜூலை 04, 2024 03:57 AM ADDED : ஜூலை 04, 2024 01:23 AM

4


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“காங்கிரசுக்கும், அதன் தலைவர்களுக்கும் நேர் வழியில், அரசை வழிநடத்த தெரியாது. ரிமோட் கன்ட்ரோல் வாயிலாக, திரைமறைவில் அரசை வழிநடத்துவதில் அக்கட்சியினர் கைதேர்ந்தவர்கள்,'' என, அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாவை குறிவைத்து, ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

லோக்சபாவைப் போலவே, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில், ராஜ்யசபாவில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து, பிரதமர் மோடி நேற்று பேசுகையில், ''உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாக மக்கள் ஓட்டளித்துள்ளனர்.

''நம் அரசியல் சாசனம் என்பது, கலங்கரை விளக்கம் போன்றது. அது தான் நமக்கு வழிகாட்டுகிறது. எங்கள் அரசை மூன்றில் ஒரு பங்கு அரசு என, எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்கின்றனர்.

நம்பிக்கை இல்லை

''ஆம். வெறும் 10 ஆண்டுகள் தான் நிறைவடைந்துள்ளன. இன்னும் 20 ஆண்டுகள் உள்ளன. இதுவரை பார்த்தவை எல்லாம் டிரெய்லர் தான். இனிதான், முக்கியமான விஷயங்கள் அனைத்துமே வரப் போகின்றன,'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''காங்கிரசும், அதன் தலைவர்களும் ரிமோட் கன்ட்ரோல் வாயிலாக அரசை நடத்த பழகி விட்டனர்.

Image 1289169


''அவர்களுக்கு வேலை செய்வதில் நம்பிக்கை இல்லை,'' என, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை, பின்னால் இருந்து சோனியா இயக்கியதாக, பா.ஜ., கூறும் குற்றச்சாட்டை அவர் குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்., தேசிய தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே குறுக்கிட்டு பேச முயன்றார்.

இதற்கு ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் அனுமதி தரவில்லை. இதை கண்டித்து, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா உட்பட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் கூறுகையில், “பிரதமர் மோடி பேசும் போது, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தது, ஜனநாயக நடைமுறைக்கு எதிரான ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது.

“சபையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நடந்து கொண்டது, பார்லி., நடத்தை மற்றும் தனியுரிமைக்கு அவமானம். ஏற்கனவே எம்.பி.,யாக பணியாற்றியவர், பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது. இது, சபையின் கவுரவத்தை சிதைக்கிறது,” என்றார்.

உறுதியான நடவடிக்கை

தொடர்ந்து, பிரதமர் மோடி பேசியதாவது:

பொய்யை பரப்பும் யாருக்குமே, உண்மையை காது கொடுத்து கேட்கும் தைரியம் இருப்பதில்லை.

புலனாய்வு அமைப்புகளை, மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால், அக்கட்சிகளின் தலைவர்கள் ஊழலில் திளைத்துக் கிடக்கின்றனர்.

ஊழலுக்கு எதிராக நடத்தப்படும் சண்டை என்பது, எங்களது உறுதியான நடவடிக்கையாக மட்டுமே பார்க்க வேண்டும். அது, தேர்தலுக்கான அரசியல் வியூகம் என, கருத வேண்டாம். புலனாய்வு அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளேன். ஊழல்வாதிகள் ஒருவரையும் விட வேண்டாமென, கூறி விட்டேன். இது தான் மோடியின் உத்தரவாதம்.

அரசியல் சாசனத்தின் மிகப்பெரிய எதிரியே, காங்., தான். நெருக்கடி நிலையை கொண்டு வந்து, அரசியல் சாசனத்தை புல்டோசர் வைத்து இடித்து தள்ளியது, அக்கட்சி தான்.

வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை வழங்கப்படும். மணிப்பூரில் வன்முறைகள் குறைந்துள்ளன. அங்கு அமைதியை ஏற்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மணிப்பூர் விவகாரத்திற்காக, உள்துறை அமைச்சர் அமித் ஷா நிறைய நேரத்தை செலவிட்டார். ஆனால், அங்கு வன்முறை தீ கொழுந்து விட்டு எரிய வேண்டுமென விரும்பி, எதிர்க்கட்சிகள் எண்ணெய் ஊற்றுகின்றன.

அங்குள்ள இனக் குழுக்களுக்கு இடையிலான ஆழமான பகை குறித்து, காங்கிரசுக்கு நன்றாகவே தெரியும். மணிப்பூரில் கடந்த காலங்களில், 10 முறை ஜனாதிபதி ஆட்சியை காங்., அமல்படுத்தி உள்ளது.

மணிப்பூர் இனக் குழுக்களுடன், மத்திய அரசு தொடர்ச்சியாக பேசி வருகிறது. விரைவில், எதிர்க்கட்சிகளின் சதி திட்டங்கள் அனைத்தும் மணிப்பூரில் முறியடிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்ப்பார்பவர்கள் யார்?

இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் ராஜ்யசபா ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வெளிநடப்புக்கு பின், பார்லி., வளாகத்தில், செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

பிரதமர் மோடி தவறான தகவல்களை அளித்ததால் வெளிநடப்பு செய்தோம். பொய் சொல்வதும், மக்களை தவறாக வழிநடத்துவதும், உண்மைக்கு எதிராகப் பேசுவதும் அவரது வழக்கம்.

அரசியலமைப்பு பற்றி பிரதமர் மோடி பேசும் போது, அதை எதிர்ப்பவர்கள் யார் என, அவருக்கு விளக்க முயற்சித்தேன். ஆனால் எனக்கு அனுமதி வழங்கவில்லை.

அரசியலமைப்பை எதிர்த்தவர்கள், நிராகரித்தவர்கள், தற்போது அதைப் பாதுகாப்பது பற்றி பேசுகின்றனர். துவக்கத்தில் இருந்தே அரசியலமைப்பிற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us