ADDED : ஆக 21, 2024 08:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: உலகளவில் சிறந்த ரிசர்வ் வங்கி கவர்னராக 2 -வது முறையாக தேர்வு பெற்ற சக்திகாந்த தாஸிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
உலகளவில் சிறந்த ரிசர்வ் வங்கி கவர்னருக்கான ரேட்டிங்கில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் ‛ ஏ பிளஸ் 'ரேங்கிங் பெற்றுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ‛எக்ஸ்' தளத்தில் கூறியது, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஸ்ரீ சக்திகாந்தா தாஸிற்கு வாழ்த்துகள், இரண்டாவது முறையாக தேர்வு பெற்றது அவரது தலைமையின் கீழ் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகும் .இவ்வாறு மோடி பாராட்டியுள்ளார்.

