ADDED : மார் 28, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : வேட்புமனுத் தாக்கலுக்கு நாள் குறிப்பது, வெற்றி வாய்ப்பு கூறுவது என, ஜோதிடர்களுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது.
லோக்சபா தேர்தலில், அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களும் சுயேச்சையாக களமிறங்குகின்றனர்.
முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று துவங்கிய நிலையில், பல்வேறு வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ய நாள் குறித்து வருகின்றனர்.
இதற்காக, ஜோதிடர்களை அணுகி, தங்களுடைய ராசி, நட்சத்திரம் உட்பட பல்வேறு விஷயங்களை கூறி நாள் குறித்துக் கொள்கின்றனர். இதனால், ஜோதிடர்களுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஜோதிடம் சொல்வதில் பெயர் போன பலரையும், அரசியல் கட்சியினர் தினமும் சந்தித்து, தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டா என்பது குறித்து கேட்கின்றனர்.

