கோலார் வேட்பாளர் மனு தாக்கல் பங்கேற்ற முனியப்பா, ரூபகலா
கோலார் வேட்பாளர் மனு தாக்கல் பங்கேற்ற முனியப்பா, ரூபகலா
ADDED : ஏப் 04, 2024 10:52 PM

- நமது நிருபர் --கோலார் - தனி தொகுதியில் தனது மருமகனுக்கு காங்கிரசில் 'சீட்' கேட்டு முயற்சித்து, தோல்வி அடைந்த அமைச்சர் முனியப்பா, தேர்தல் பணியில் ஈடுபடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், பலரின் தப்பு கணக்குகளை முறியடித்தார். நேற்று காங்கிரஸ் வேட்பாளர் கவுதம் வேட்புமனு தாக்கல் செய்த போது, அமைச்சர் முனியப்பா, அவரின் மகளான தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபகலா ஆகியோர் மட்டுமே அவருடன் அறைக்குள் சென்றனர்.
அமைச்சர் முனியப்பாவுக்கு எதிர் கோஷ்டியான அமைச்சர் சுதாகர், முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கொத்துார் மஞ்சுநாத், நஞ்சேகவுடா, எம்.எல்.சி.,க்கள் நசீர் அகமது, அனில் குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்யும் இடமான கலெக்டர் அலுவலக வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்டனர்.
பங்கார்பேட்டை எம்.எல்.ஏ., நாராயணசாமி வரவில்லை.

