" என் கணவர் உண்மையான தேச பக்தர் "- கெஜ்ரிவால் மனைவி சொல்கிறார்
" என் கணவர் உண்மையான தேச பக்தர் "- கெஜ்ரிவால் மனைவி சொல்கிறார்
UPDATED : மார் 29, 2024 02:09 PM
ADDED : மார் 29, 2024 01:45 PM

புதுடில்லி: என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கூறினார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில் அவரது மனைவி சுனிதா வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
வீடியோவில், '' கெஜ்ரிவாலை எவ்வளவு நேசிக்கிறீர்கள், நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அதனை 8297324624 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அனுப்புங்கள். உங்கள் ஒவ்வொரு செய்தியும் அவரை சென்றடையும். அவர் அதைப்படிக்க விரும்புவார். அவருக்கு எழுத நீங்கள் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டியதில்லை.
என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர். தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் துணிச்சலாக எடுத்து வைத்தார். அவருக்காக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்'' என பேசினார்.

