ADDED : ஆக 25, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முசாபர்பூர்,
பீஹார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் உள்ள நிரலா நிகேதன் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தாயுடன் நேற்று முன்தினம் சென்றார்.
நேற்று காலை வரை அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை. தாயை மொபைல் போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று, சிறுமி வீட்டின் அருகே புதரில் பெரிய 'பேக்' கேட்பாரற்று கிடப்பதாக அப்பகுதியினர் போலீசுக்கு தெரிவித்தனர்.
போலீசார் பேக்கை திறந்து பார்த்தபோது, அதில் சிறுமி சடலமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தையை கொலை செய்தது அவரது தாயா என்பதைக் கண்டறிய தொடர்ந்து அவரது செல்போன் சிக்னலை கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

