ADDED : ஜூலை 06, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாந்தினி சவுக்: பழைய டில்லி ரயில் நிலையம் அருகே உள்ள தற்காலிகக் கடைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்து வந்த வியாபாரி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.
பதேபுரியைச் சேர்ந்தவர் கவுரவ் தாக்கூர், 34. இவர், பழைய டில்லி ரயில் நிலையம் அருகே உள்ள தற்காலிகக் கடைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்து வந்தார். டங்கல் மைதானம் பார்க்கிங் அருகே நேற்றிரவு வழக்கம்போல் கட்டிலில் படுத்து துாங்கச் சென்றார். நேற்று காலை அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கோட்வாலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கட்டிலில் படுத்த நிலையில், அவரது கழுத்தின் பின்புறம் குத்தப்பட்ட காயம் இருந்தது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.