
கவிழ காத்திருக்கும் ஆட்சி!
லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் தோற்றுவிட்டார். இதனால், அவரின் அதிகாரமும், புகழும் கால்வாசியாக குறைந்துவிட்டது. நிதீஷையும், நாயுடுவையும் சார்ந்துள்ள அவரது அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்கிரஸ்
தவறை பூசி மழுப்பும் அரசு!
உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் இறந்தனர். இது போன்ற இறப்புகள் மாநிலத்தில் தொடர்ந்து நடக்கின்றன. ஆனால், இவற்றுக்கு யார் பொறுப்பேற்பது என்பதை அரசு முடிவு செய்யவில்லை. அதற்கு பதில் இவற்றை பூசி மழுப்புவதில் தான் ஆர்வம் காட்டுகிறது.
பிரியங்கா
பொதுச்செயலர், காங்கிரஸ்
நீட் குறித்து பொய்!
காங்கிரசும், இண்டியா கூட்டணியினரும் நீட் குறித்து பொய்களை கூறி மாணவர்களை தவறாக வழி நடத்துகின்றனர். நாட்டு இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலமே இந்த அரசின் முதல் முக்கியத்துவம் என்பதை பிரதமர் மீண்டும் கூறியுள்ளார். எந்த மாணவருக்கும் அநீதி நடக்க அனுமதிக்க மாட்டோம்.
தர்மேந்திர பிரதான்
மத்திய அமைச்சர், பா.ஜ.,