
கூட்டணியின் நோக்கம் என்ன?
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர், ஊழல் செய்வோர் ஆகியோரை பாதுகாப்பது தான், 'இண்டி' கூட்டணி கட்சிகளின் நோக்கம். மேற்கு வங்கத்தில் ஒரு பெண் முதல்வராக இருக்கும்போதே, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் நடப்பது, துரதிர்ஷ்டவசமானது.
பன்சுரி சுவராஜ்
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
கட்டாயமே காரணம்!
எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிறைக்கு சென்றதால், தொண்டர் களின் மன உறுதி சீர்குலையாமல் இருப்பதற்காக, கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கெஜ்ரிவால் சிறையிலிருந்து வந்ததும், சுனிதாவின் அரசியல் பணி முடிந்து விடும்.
மணீஷ் சிசோடியா
மூத்த தலைவர், ஆம் ஆத்மி
வெறுப்பை பரப்புவதா?
தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களிடையே வெறுப்பை பரப்புகின்றனர். நாம் எளிதாக சுதந்திரம் பெற்று விட்டதாக அவர்கள் பிரசாரம் செய்கின்றனர். ஆனால், சுதந்திரத்தை அடைவதற்காக பலர், தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட சிறைவாசம் அனுபவித்தனர்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்

