
சிலருக்கு மட்டும் பலன்கள்!
மஹாராஷ்டிராவின் மரபணுவில் காங்கிரசின் சித்தாந்தம் உள்ளது. இன்று காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை; கருத்தியல் சண்டை செய்கிறது. நாங்கள் சமூக முன்னேற்றத்தை விரும்புகிறோம். ஆனால், பா.ஜ.,வினர் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அனைத்து பலன்களையும் பெற விரும்புகின்றனர்.
ராகுல்
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
தைரியம் உண்டா?
கோல்கட்டா ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள போதும், மம்தா அரசு அவரை பாதுகாக்கிறது. இங்கு நடந்த பலாத்காரத்திற்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் தைரியம் மம்தாவுக்கு உண்டா?
சுகந்த மஜும்தார்
மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,
இறுதிச்சடங்கு நடத்துவோம்!
உலகளவில் தீய சக்திகள் உள்ளன. அவற்றால் ஏற்படும் வன்முறை செயல்கள் எல்லா நாடுகளிலும் நடக்கின்றன. வங்கதேசத்தில் நடந்தது முதல் சம்பவம் அல்ல. இந்த தீய சக்தியினர், நம் நாட்டில் வேலையை காட்டினால், அவர்களுக்கு நாம் இறுதிச்சடங்கு நடத்துவோம். அவர்களை அடக்கும் அறிவு நமக்கு இருக்கிறது.
மோகன் பகவத்
தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,