
கூட்டணியில் தொடர்வேன்!
பா.ஜ.,வுக்கும், ஐக்கிய ஜனதா தளத்துக்குமான கூட்டணி 1990களில் இருந்தே உள்ளது. அந்த கூட்டணியில் தான் பீஹாருக்கு பல நல்ல திட்டங்கள் கிடைத்தன. ராஷ்ட்ரீய ஜனதா தளம் பீஹாருக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களுடன் கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன். இனி பா.ஜ., கூட்டணியிலேயே இருப்பேன்.
நிதீஷ் குமார்
பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்
பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது!
ஜம்மு - காஷ்மீரில் முக்கிய விஷயங்களை திசை திருப்புவதில், மறக்கடிப்பதில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்காக பலர் இறந்தனர். அந்த பிரச்னையை மாநில அந்தஸ்து மீட்பு என்ற வகையில் பா.ஜ., மறக்கடித்தது. அதுவும்போய் தற்போது தேர்தல் என்ற விஷயத்தை பா.ஜ., முன் வைக்கிறது.
மெஹபூபா முப்தி
தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
சிலைகளில் அரசியல் கூடாது!
மஹாராஷ்டிராவில் சிவாஜி சிலை விழுந்தது போல், மற்ற மாநிலங்களில் நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் போர்வையில் அரசியல் செய்யக் கூடாது. மன்னர்கள், சிறந்த தலைவர்களின் சிலைகளை வைக்கும் போது நேர்மறை அணுகுமுறை முக்கியம்.
மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்