சமாஜ்வாதி கட்சியினர் நடிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது!
சமாஜ்வாதி கட்சியினர் நடிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது!
UPDATED : ஜூலை 30, 2026 09:33 PM
ADDED : ஜூலை 30, 2026 08:53 PM
ராமரை ஏமாற்றிய பா.ஜ.,! ராம ராஜ்ஜியத்தை உருவாக்க முயற்சிப்பதாக பா.ஜ., கூறுகிறது. ஆனால், அக்கட்சியின் ஆட்சியிலேயே அயோத்தி ராமர் கோவில் நன்கொடையில் முறைகேடு நடந்துள்ளது. நன்கொடைகளை திருட அனுமதித்ததன் வாயிலாக, ராமரையே பா.ஜ., ஏமாற்றியுள்ளது. இது, அக்கட்சியின் உண்மையான மனநிலையை வெளிப்படுத்துகிறது. டிம்பிள் யாதவ் லோக்சபா எம்.பி., சமாஜ்வாதி கட்சி
ஏற்க முடியாது! அயோத்தியை அவமதித்தவர்கள், அதன் புகழுக்கு களங்கம் விளைவித்தவர்கள் சமாஜ்வாதி கட்சியினர். ராம பக்தர்களை தாக்கி, அயோத்தியில் ஓடும் சரயு நதியை மாசுபடுத்தியவர்கள் அவர்கள். இப்போது, ராமர் கோவில் மீது அக்கறை கொண்டிருப்பதாக அக்கட்சியினர் நடிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது, பக்தியே அல்ல. சுதான்ஷு திரிவேதி ராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,
கொடூர வன்முறை! டில்லியில் மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மாணவர்களுக்கு நீதி வேண்டும். அவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர வன்முறை குறித்து பார்லி.,யில் பேச மத்திய அமைச்சர் அமித் ஷா பயப்படுவது ஏன்? ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸ்
