UPDATED : ஆக 04, 2026 10:22 PM
ADDED : ஆக 04, 2026 08:00 PM
'இ - 20' பெட்ரோல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி டில்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பேரணி செல்ல முயன்றது அபத்தமானது; அர்த்தமற்ற போராட்டமும் கூட. விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அவர், இதன் மூலம் தன் தோல்வியடைந்த அரசியலை உயிர்ப்பிக்க முயல்கிறார். தருண் சுக் தேசிய பொதுச் செயலர், பா.ஜ.,
எதிர்மறை அரசியல்!
பீஹார் பாங்கிபூர் சட்டசபை இடைத்தேர்தலில் பெரும் தோல்வியை பா.ஜ., சந்தித்ததற்கு முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் எதிர்மறையான அரசியலே காரணம். இவரது தலைமையில் அக்கட்சி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. மாநிலத்தை நிர்வகிப்பதில் அவர் முழுமையாக தோற்றுவிட்டார். தேஜஸ்வி யாதவ் பீஹார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம்
கடுமையான வேதனை!
நாட்டில் உள்ள மாணவர்கள், 'நீட்' தேர்வு பிரச்னை, போலீசார் தாக்குதல் உட்பட பல்வேறு பிரச்னைகளால் கடுமையான மனவேதனையில் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பிரதமர் மோடியின் மன்னிப்பு தேவை இல்லை. மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்குதான் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரஸ்
