ADDED : ஜூலை 28, 2026 06:21 PM
ஆக., 5ல் போராட்டம்! ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநில மற்றும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, வரும் 5ல், மாநிலம் முழுதும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும். எங்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பறித்ததை எங்களுக்கே வழங்க வேண்டும். எங்களது அடையாளத்தை மீட்டெடுப்பதில் சமரசம் இல்லை. மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
உண்மைக்கு புறம்பானவை! மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின், தர்மேந்திர பிரதானுக்கு வேறொரு துறை வழங்க மத்திய அரசு முன்வந்ததாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை; கற்பனையானவை. அது போல எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். சம்பித் பத்ரா லோக்சபா எம்.பி., – பா.ஜ.,
கெஜ்ரிவால் மவுனம் ஏன்? பஞ்சாபில், அரசு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவது தொடர்கதையாகி உள்ளது. ஆனால் இது பற்றி, ஆளும் ஆம் ஆத்மி கட்சியோ, அதன் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலோ எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் ஒரு சுயநலவாதி. ஆம் ஆத்மியின், ‘பி டீம்’ தான், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. இது, அனைவருக்கும் தெரியும். ஸ்வாதி மாலிவால் ராஜ்யசபா எம்.பி., – பா.ஜ.,
