
வாய் திறக்காதது ஏன்?
மத்தியில் தே.ஜ., கூட்டணி அரசில், கிங் மேக்கராக இருந்து கொண்டு, ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கை குறித்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு வாய் திறக்காதது ஏன்? மவுனத்திற்கான காரணம் குறித்து, அவர் மக்களுக்கு விளக்க வேண்டும்.
ஒய்.எஸ்.ஷர்மிளா
ஆந்திரா காங்., தலைவர்
அரசியல் சாசன நெருக்கடி!
முதல்வர் நாற்காலியை விட்டுத் தர மாட்டேன் என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிடிவாதமாக இருக்கிறார். மேலும் அவர், சிறையில் இருந்து ஆட்சி செய்கிறார். டில்லியில் அரசியல் சாசன நெருக்கடியை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உருவாக்குகின்றனர்.
பன்சூரி சுவராஜ்
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
மிகப்பெரும் விலை!
லோக்சபாவில் கடந்த முறை என்னை பேச அனுமதிக்கவில்லை. என் குரலை அடக்கியதற்காக, லோக்சபா தேர்தலில், பா.ஜ., மிகப்பெரும் விலையை கொடுத்துள்ளது. 303 ஆக இருந்த அக்கட்சி எம்.பி.,க் களின் எண்ணிக்கை, 240ஆக குறைந்துள்ளது.
மஹுவா மொய்த்ரா
லோக்சபா எம்.பி., -
திரிணமுல் காங்கிரஸ்