
அக்கறை இல்லாத காங்கிரஸ்!
கர்நாடகாவில் ஆளும் காங்., அரசுக்கு ஜனநாயகத்தின் மீது அக்கறை இல்லை. அக்கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருக்கும். ஆனால், இதுவரை உள்ளாட்சி தேர்தல் பற்றி ஒரு வார்த்தை கூட காங்., அரசு பேசவில்லை.
குமாரசாமி
மத்திய அமைச்சர், மதச்சார்பற்ற ஜனதா தளம்
தொடரும் கொள்ளை!
கச்சா எண்ணெய் விலை 32.5 சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும், பா.ஜ.,வின் எரிபொருள் கொள்ளை தொடர்கிறது. பா.ஜ.,வால் துாண்டி விடப்பட்ட விலைவாசி உயர்வுக்கு, தேர்தல் நடக்கும் மாநிலங்களில் உள்ள மக்கள் பதிலடி கொடுப்பர்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்.,
சாத்தியம் இல்லை!
தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லாதது. இதற்கு குறைந்தது ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவை. மேலும், பார்லி.,யில் இதை அறிமுகப்படுத்த பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லை.
சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,

