sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தீவிர வறுமையில் இருந்து மீண்டது கேரளா: பினராயி விஜயன் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

/

தீவிர வறுமையில் இருந்து மீண்டது கேரளா: பினராயி விஜயன் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

தீவிர வறுமையில் இருந்து மீண்டது கேரளா: பினராயி விஜயன் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

தீவிர வறுமையில் இருந்து மீண்டது கேரளா: பினராயி விஜயன் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

3


ADDED : நவ 01, 2025 07:36 PM

Google News

3

ADDED : நவ 01, 2025 07:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: '' கேரள மாநிலம் தீவிர வறுமையில் இருந்து மீண்டுவிட்டது,'' என அம்மாநில சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். ஆனால், இது பெரிய மோசடி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

உதாரணம்


கேரள மாநிலத்தின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த சிறப்பு சட்டசபை கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: தேசம் முன்பு மற்றொரு மாடலை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். பல்வேறு நலத்திட்டங்களின் ஆய்வகமாக கேரள மாநிலம் திகழ்கிறது. தீவிர வறுமையை அகற்றுவதற்கான நமது நடவடிக்கைகள் மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இருக்கும்.

சாத்தியம்

எதிர்க்கட்சிகளுக்கு பயம் ஏன். இது வரலாற்று சிறப்பு மிக்க சாதனை . சட்டசபை மூலம் உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இதனை இங்கு அறிவிக்கிறேன். 2021ல் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, 1032 உள்ளாட்சி அமைப்புகளில் 64,006 குடும்பங்களை சேர்ந்த 1,03,099 பேர் தீவிர வறுமையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டனர். இதற்காக உணவு, சுகாதாரம், தங்குமிடம் மற்றும் வருமானம் ஆகியவை கணக்கிடப்பட்டது. 2023 - 24 மற்றும் 2024 - 25ம் நிதியாண்டிற்கு இதற்கான ஒவ்வொரு திட்டத்துக்கும் தலா ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது.

சுகாதாரம், வீட்டு வசதி மற்றும் வாழ்வாதார திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டது. தீவிர வறுமையை ஒழிக்க ரூ. ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டது. 1961- 62, ல் ஐநா அமைப்பு நடத்திய ஆய்வில், நகர்ப்புற பகுதிகளில் 90.75 சதவீதம் பேரும், கிராமப்புற பகுதிகளில் 88.89 சதவீதம் பேரும் தீவிர வறுமையில் இருப்பதாக தெரியவந்தது. தற்போது, நாட்டில் முதல் மாநிலமாக தீவிர வறுமையில் இருந்து மீண்ட மாநிலமாக கேரளா உள்ளது. இது மீண்டும் தலைதூக்காமல் பார்த்துக் கொள்வோம். மக்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் எதுவும் சாத்தியம் என்பதை இது காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மோசடி

முதல்வர் பேச துவங்குவதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி டி சதீசன் பேசுகையில், கேரளா தீவிர வறுமையில் இருந்து மீண்டுவிட்டது என்பது பெரிய மோசடி. இந்த மோசடியில் பங்கேற்க முடியாது. இதனால் இந்த கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். கடந்த சட்டசபை கூட்டத்தொடர் முதல் அவைக்கு உள்ளேயும், வெளியேயும், தேவசம்போர்டு அமைச்சர் பதவி விலக வேண்டும். திருவாங்கூர் தேவசம் போர்டை கலைக்க வேண்டும் எனக்கூறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us