
தோல்வி அடைந்த மோடி!
மத்தியில் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தால், அரசியல்அமைப்பு சட்டத்தை மாற்றப்போவதாக, பா.ஜ., தலைவர்கள் தம்பட்டம் அடித்து வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்துவதில், பிரதமர் மோடி தோல்வி அடைந்து விட்டார்.
லாலு பிரசாத் யாதவ்
தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
பாரபட்சமின்றி செயல்படுங்க!
பா.ஜ., தலைவர்கள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களிலும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும். அரசியல் பாரபட்சமின்றி மத்திய அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர்,
திரிணமுல் காங்.,
மக்கள் பதிலடி கொடுப்பர்!
அரசுக்கு எதிராக போராடும் அமைப்புகளுக்கு திரிணமுல் காங்., ஆதரவு அளித்து வருகிறது. மேலும், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் புரிவோரையும் அக்கட்சி பாதுகாத்து வருகிறது. இது போன்ற அராஜகங்களுக்கு, தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பர்.
அனுராக் தாக்குர்
மத்திய அமைச்சர், பா.ஜ.,

