
கட்சித் தாவலை தடுங்கள்!
அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி கட்சி மாறுகின்றனர். இது ஒரு மோசமான போக்கு. இதை தடுக்க கட்சி தாவல் தடைச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். கட்சி மாற விரும்பினால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சி மாற வேண்டும்.
வெங்கையா நாயுடு
முன்னாள் துணை ஜனாதிபதி
பா.ஜ.,வை கண்டுகொள்ளவில்லை!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாடு முழுதும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதே சமயம் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. அது ஒரு தேர்தல் அறிக்கையாகவே இல்லை. அதற்கு மோடியின் உத்தரவாதம் என பெயரிட்டுள்ளனர்.
சிதம்பரம்
மூத்த தலைவர், காங்கிரஸ்
நீதிமன்றத்தை நாடுவோம்!
ராஜஸ்தானில் பிரதமர் மோடி ஒரு பிரிவினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசினார். இது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால், சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.
சுப்ரியா ஸ்ரீநாதே
செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்

