
மன்னிப்பு கேளுங்கள்!
அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் மோடி மாற்றி விடுவார் என ராகுல் மக்களை பயமுறுத்தி வருகிறார். நேரு குடும்பம் தான், அரசியலமைப்பில் நிறைய மாற்றங்களை செய்துள்ளது. ராகுல் தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
மோகன் யாதவ்,
ம.பி., முதல்வர், பா.ஜ.,
முட்டுக்கட்டை போடுகின்றனர்!
ஆந்திர மக்கள் நேரடியாக பலன்பெறும் ஓய்வூதிய திட்டம், மானிய திட்டங்கள் போன்றவற்றுக்கு சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ., தலைவர் புரந்தேஸ்வரியும் முட்டுக்கட்டை போடுகின்றனர். இதற்காக தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
ஜெகன் மோகன் ரெட்டி,
ஆந்திர முதல்வர், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்
ஓட்டுப்பதிவில் மோசடி!
உத்தர பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் பா.ஜ., தொண்டர்கள் பூத்துகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சில இடங்களில் ஓட்டுப்பதிவில் மோசடி நடந்து உள்ளது. அது குறித்து கேட்ட எதிர்க்கட்சியினரை போலீசாரை பயன்படுத்தி கைது செய்துள்ளனர்.
அகிலேஷ் யாதவ்,
தலைவர், சமாஜ்வாதி

