
வெற்று பேச்சுகள்!
பிரதமர் மோடியின் தேர்தல் பேச்சுகள் அனைத்தும் வெற்று பேச்சுகளாகவே உள்ளன. அவற்றில் எந்த அர்த்தமும் இல்லை. அரசியலை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே அவரது குறிக்கோள். மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் இல்லை.
பிரியங்கா
பொதுச்செயலர், காங்கிரஸ்
தகவல் சொல்வதில்லை!
கேரள முதல்வர் பினராயி விஜயனின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து எனக்கு தெரியாது. இது குறித்து எனக்கு தெரியப்படுத்திய பத்திரிகைகளுக்கு நன்றி. கவர்னர் மாளிகைக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை என, ஏற்கனவே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
ஆரிப் முகமது கான்
கேரள கவர்னர்
பாகிஸ்தான் மீது காதலா?
புல்வாமா தாக்குதலை பிரதமர் மோடியால் தடுக்க முடியவில்லை என ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். அதை நடத்தியது தங்கள் நாடு என பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரே ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் மீதான காதலால், அதை ரேவந்த் ரெட்டி கவனிக்கவில்லையா?
சுதன்ஷு திரிவேதி
செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,