
அயராத படையினர்!
நாட்டின் எல்லையில் கடுமையான சூழல் நிலவும் போதும், எல்லை பாதுகாப்பு படையினர், உயரமான இமயமலை முதல் வடகிழக்கின் அடர்ந்த காடுகள் வரை பல்வேறு நிலப்பரப்புகளிலும் தங்கள் பணியில் அயராது ஈடுபடுகின்றனர்.
ஜக்தீப் தன்கர்
துணை ஜனாதிபதி
குரல் கொடுங்கள் ஹசாரே!
மஹாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் 25,000 கோடி ரூபாய் ஊழல் நடந்த வழக்கை மும்பை போலீசார் மூடியுள்ளனர். தேர்தல் பத்திரங்கள் பெயரில் ஊழல் நடந்துள்ளது. இதற்கு எதிராக ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் அன்னா ஹசாரே குரல் எழுப்ப வேண்டும்.
சஞ்சய் ராவத்
மூத்த தலைவர்,
சிவசேனா உத்தவ் அணி
ஆதிக்கம் கூடாது!
வலிமையான நாடு சிறிய நாடுகள் மீது அதிகாரம் செலுத்தலாம் என்ற நிலை இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட இந்தியா அனுமதிக்காது. அனைவருக்குமான நலன் மற்றும் மகிழ்ச்சி என்ற பாதையில் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம்.
ராஜ்நாத் சிங்
ராணுவ அமைச்சர், பா.ஜ.,