
எதுவும் செய்யாத அரசு!
ஹிமாச்சல் மாநிலத்தில் வெள்ளத்தால் பலர் தங்கள் குடும்பங்களை இழந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு காங்., தலைமையிலான மாநில அரசின் அமைச்சர்கள் எதுவும் செய்யவில்லை. உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு இழப்பீடுகளை வழங்க வேண்டும். மத்திய அரசு விரைவில் நிதி வழங்கும்.
கங்கனா
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
யாருக்காக இந்த பட்ஜெட்?
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் 31 சதவீதம். ஏழைகள் 60 - -65 சதவீதம் உள்ளனர். இந்த பட்ஜெட் இரு பிரிவு மக்களின் தேவைகளையும் கவனத்தில் கொள்ளவில்லை. பிறகு யாருக்கு இந்த பட்ஜெட்? ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது.
மஹுவா மொய்த்ரா
லோக்சபா எம்.பி., -
திரிணமுல்
ராகுல் ஒரு துறவி!
ராகுலின் ஜாதி பற்றி அனுராக் தாக்குர் கூறியதற்கு மன்னிப்பு கேட்கிறேன். ஜாதி குறித்த அவரது கருத்து தவறு. ராகுல் தன்னை ஜாதியற்றவர் என்கிறார். அப்படி என்றால் அவர் ஒரு துறவி. அவரைப் போல் நாட்டில் பலர் உள்ளனர். அவர்கள் எப்படி ஜாதி வாரி கணக்கெடுப்பில் பங்கேற்பர். காங்கிரஸ் தான் விளக்க வேண்டும்.
நிஷிகாந்த் துபே
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,