UPDATED : ஆக 09, 2026 09:45 PM
ADDED : ஆக 09, 2026 07:02 PM

வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தில் அறைக்கூவல் விடுத்து பங்கேற்றவர்களின் தைரியம், ஒவ்வொரு இந்தியனுக்கும் எப்போதும் உத்வேகம் அளிக்கும். இது, நம் சுதந்திரப் போராட்டத்தில் புதிய ஆற்றலை புகுத்தியது. காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட வேண்டும் என்ற நம் மக்களின் அசைக்க முடியாத உறுதியை பிரதிபலித்தது. நரேந்திர மோடி பிரதமர்
விழிப்புடன் இருங்கள்!
நம் இளைஞர்களை, பிரதமர் மோடி வலுப்படுத்த முயற்சித்து வருகிறார். ஆனால், சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடு, போதைப்பொருள் மற்றும் எதிர்மறை பிரசாரங்கள் மூலம் அன்னிய சக்திகள் அவர்களை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். அத்தகைய சக்திகளிடம் இருந்து விலகி, நாட்டின் ஒற்றுமைக்காக இளைஞர்கள் உழைக்க வேண்டும். மோகன் சரண் மஜி ஒடிஷா முதல்வர், பா.ஜ.,
யாருக்கு பயன்?
தொகுதி மறுவரையறை மசோதா, ஒட்டுமொத்த நாட்டிற்கும் உகந்தது அல்ல. மத்திய மாநிலங்களுக்கே பலனளிக்கும். இது, வடக்கு, தெற்கு, வடகிழக்கு மாநிலங்களுக்கு பயனளிக்காது. எனவே, தங்கள் மாநிலங்களுக்கான முக்கியத்துவம் குறைவதாக அப்பகுதி மக்கள் கருதாதவாறு மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மணீஷ் திவாரி லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
