sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'செபி' தலைவர் மீது புதிய புகார்

/

'செபி' தலைவர் மீது புதிய புகார்

'செபி' தலைவர் மீது புதிய புகார்

'செபி' தலைவர் மீது புதிய புகார்

2


ADDED : ஆக 17, 2024 03:58 AM

Google News

ADDED : ஆக 17, 2024 03:58 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: 'செபி'அமைப்பின் தலைவர் மாதவி புரி புச், விதிகளை மீறி ஏழு ஆண்டுகள் தன் முதலீட்டு ஆலோசனை நிறுவனம் வாயிலாக, 3.71 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பதாக, புதிய குற்றச்-சாட்டு எழுந்துள்ளது.

'அதானி' குழுமத்தின் சட்டவிரோத முதலீட்டு நிறுவனங்களில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான 'செபி' அமைப்பின் தலை-வர் மாதவி புரி புச், அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முத-லீடு செய்திருப்பதாக, ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம், அண்மை-யில் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது. ஆனால், இவையனைத்-தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மாதவி மறுத்திருந்தார்.

இந்நிலையில், தற்போது 'ராய்ட்டர்' செய்தி நிறுவனம் வெளியிட்-டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2017ம் ஆண்டு 'செபி'அமைப்பின் முழு நேர உறுப்பினராக இணைந்த மாதவி புரி புச், கடந்த 2022ல் செபி அமைப்பின் தலைவராக பொறுப்-பேற்றார். 2017 முதல் 2022ம் ஆண்டு வரையிலான ஏழு ஆண்-டுகளில், 'அகோரா அட்வைசரி பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்-தின் 99 சதவீத பங்குகளை வைத்திருந்த அவர், 3.71 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி உள்ளார். பதிவாளரிடம் தாக்கல் செய்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்-ளது.

'செபி' விதிகளின்படி, அலுவலக முழு நேர உறுப்பினர்கள், வேறு தொழில்முறை நடவடிக்கையில் இருந்து சம்பளமோ, ஆதாயமோ பெற தடை உள்ளது. ஆனால், மாதவியின் நடவ-டிக்கை, இந்த விதிகளுக்கு மாறாக இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us