புதிய குற்றவியல் சட்டங்கள் திகார் சிறையில் பயிற்சி முகாம்
புதிய குற்றவியல் சட்டங்கள் திகார் சிறையில் பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 04, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜனக்புரி:புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக டில்லி திகார் சிறையில் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதிய சட்டங்கள் குறித்து, சிறைத்துறையினருக்கும் கைதிகளுக்கும் பல்வேறு தகவல்கள் வழங்கப்பட்டன. கேள்வி - பதில் அமர்வுகளும் நடத்தப்பட்டன.
தவிர டில்லியின் 16 மத்திய சிறைகளிலும் புதிய சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. புதிய சட்டங்களின் பல்வேறு பிரிவுகள் குறித்து சிறை ஊழியர்களுக்கு விளக்கப்பட்டது.
'மூன்று புதிய சட்டங்களின் விதிகளை நடைமுறைப்படுத்துவதிலும், சிறையின் செயல்பாட்டில் அவற்றைப் பயன்படுத்துவதிலும் மிகுந்த அக்கறையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என, சிறைத்துறை உயர் அதிகாரி கூறினார்.