ADDED : மார் 28, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய இயக்குனராக, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியும், மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படையின் தலைவருமான சதானந்த் வசந்த் டேட் நியமிக்கப்பட்டுள்ளார்.
என்.ஐ.ஏ.,வின் இயக்குனராக தின்கர் குப்தா உள்ளார். அவரது பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் முடிகிறது. தற்போது அந்த பொறுப்புக்கு மஹாராஷ்டிராவில் இருந்து 1990ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான, சதானந்த் வசந்த் டேட்டை நியமிக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவர் 2026, டிச., 31 வரை இப்பதவியில் நீடிப்பார்.
மேலும், கேரளாவில் இருந்து 1995ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான சுரேஷ், பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.