மோடி மீண்டும் முதல்வராக வேண்டுமாம் : மீண்டும் குழப்பிய நிதிஷ்
மோடி மீண்டும் முதல்வராக வேண்டுமாம் : மீண்டும் குழப்பிய நிதிஷ்
UPDATED : மே 26, 2024 08:25 PM
ADDED : மே 26, 2024 08:06 PM

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மோடி மீண்டும் முதல்வராக வேண்டும் என தான் விரும்புவதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.
நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக பொது தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் (25.05.2024) 6-ம் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இறுதி மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் வரும் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதில் பீகார் மாநிலத்தில் ஏழு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையடுத்து பாட்னாசாஹிப் மக்களை தொகுதிக்குட்பட்ட டானியாவான் பகுதியில் தேர்தல் பிரசாரம் நடந்தது. இதில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நாட்டில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மோடி மீண்டும் முதல்வராக வர வேண்டும். நாடும் வளர்ச்சி அடையும் பீகாரும் முன்னேற்றம் அடையும். எல்லாம் நடக்கும். இவ்வாறு நிதிஷ் பேசினார்.
முதல்வர் நிதிஷின் தவறை சுட்டிக்காட்டிய சக எம்.எல்.ஏ., தொடர்ந்து பேசிய நிதிஷ், மோடி ஏற்கனவே பிரதமராக இருந்து வருகிறார். அவர் இப்போதும் பிரதமராக முன்னேறுவார் என்று நான் சொல்கிறேன் அது தான் எனக்கு வேண்டும்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ,2020--ம் ஆண்டு மறைந்த ராம் விலாஸ் பஸ்வானுக்கு நிதிஷ் வாக்கு கேட்ட சில தினங்களுக்குள் இந்தகுழப்பம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.