பிரஜ்வல் ரேவண்ணாவுடன் எந்த தொடர்பும் இல்லை: சித்தப்பா குமாரசாமி நழுவல்
பிரஜ்வல் ரேவண்ணாவுடன் எந்த தொடர்பும் இல்லை: சித்தப்பா குமாரசாமி நழுவல்
ADDED : ஏப் 30, 2024 12:00 PM

பெங்களூரு: எனக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, 91. இவரது மூத்த மகன் ரேவண்ணா, 66. இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா, 33. பிரஜ்வல் ரேவண்ணாவின் சித்தப்பா குமாரசாமி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான ஆபாச வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது.
காங்கிரஸ் சூழ்ச்சி
இது குறித்து குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எங்கள் குடும்பத்தின் நற்பெயரை கெடுக்க காங்கிரஸ் சூழ்ச்சி செய்கிறது. அதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பல்ல. இது பிரஜ்வல் ரேவண்ணாவின் தனிப்பட்ட பிரச்னை.
நழுவல்
எனக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. பிரஜ்வலை சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும். சிறிது நேரம் பொறுங்கள். எங்கள் கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மேலும் தகவல் தெரிவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

