என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை: சுப்ரீம் கோர்டில் கெஜ்ரிவால் பதில் மனு
என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை: சுப்ரீம் கோர்டில் கெஜ்ரிவால் பதில் மனு
ADDED : ஏப் 27, 2024 04:23 PM

புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்டில் கெஜ்ரிவால் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 'அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை' என மனுவில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ல் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, 'டில்லி மதுபான கொள்கை ஊழலுக்கு தலைமை ஏற்று, சதி திட்டங்கள் தீட்டியதில் முக்கிய நபராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்துள்ளார். இந்த ஊழலில் அதிகம் பயன் அடைந்தது, ஆம் ஆத்மி கட்சி. 'எனவே, ஒரு குற்றத்திற்காக காரணத்துடன் ஒருவரை கைது செய்வது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறையை மீறுவதாகாது' என, சுப்ரீம் கோர்டில் அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.
கெஜ்ரிவால் பதில் மனு
 
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 27) சுப்ரீம் கோர்டில் கெஜ்ரிவால் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், '' அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு ரூபாய் கூட ஊழல் செய்யவில்லை. மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லை'' என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

