ADDED : மார் 08, 2025 11:58 PM

கர்நாடக அரசு பொதுப்பணி ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. இந்த தாஜா செய்யும் நடவடிக்கைகளை காங்கிரஸ் அரசு திரும்பப் பெற வேண்டும். இது பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளுக்கு எதிரானது.
அனில் ஆன்டனினா, தேசிய செயலர், பா.ஜ.,
இருமொழியை கவனியுங்கள்!
முதலில் அரசு இருமொழி கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும். அதன் பின் மும்மொழி கொள்கை பற்றி விவாதிக்கலாம். ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக்கொள்கை தான் உள்ளது. பொதுவான மொழியாகவும், அதிகாரப்பூர்வ மற்றும் பயிற்று மொழியாகவும் ஹிந்தி மட்டுமே உள்ளது.
சிதம்பரம், மூத்த தலைவர், காங்கிரஸ்
தி.மு.க., அரசின் அரசியல்!
மும்மொழி கொள்கையின்படி மாணவர்கள் முதல் தேர்வாக தாய் மொழியையும், இரண்டாவது தேர்வாக ஆங்கிலமும், மூன்றாவது தேர்வாக அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் எதை வேண்டு மானாலும் தேர்வு செய்யலாம். இதைத் தெரிந்தே தமிழக அரசு அரசியல் செய்கிறது.
சுகந்த மஜும்தார், மத்திய அமைச்சர், பா.ஜ.,