வருடத்திற்கு ஒரு பிரதமரல்ல; நான்கு பிரதமர்களை தேர்ந்தெடுப்போம்: சஞ்சய் ராவத்
வருடத்திற்கு ஒரு பிரதமரல்ல; நான்கு பிரதமர்களை தேர்ந்தெடுப்போம்: சஞ்சய் ராவத்
UPDATED : ஏப் 28, 2024 07:59 PM
ADDED : ஏப் 28, 2024 07:55 PM

மும்பை: இண்டியா கூட்டணி  ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 2  அல்லது 4 பிரதமர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறினார்.
இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் வருடத்திற்கு ஒரு பிரதமர் என 5 பிரதமர்களை உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பேரணியின் போது பிரதமர் மோடி கூறி இருந்தார்.
பிரதமரின் கருத்துக்கு பதில் அளித்துள்ள சிவசேனாவின் சஞ்சய்ராவத் பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. அவர்கள் ஒரு வருடத்தில் இரண்டு அல்லது நான்கு  பிரதமர்களை கூட உருவாக்குவார்கள்  ஆனால் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி செல்ல விடமாட்டோம் என்றார்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியை விட கூட்டணி ஆட்சி சிறந்தது. யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது எங்கள் விருப்பம்.தற்போது முடிந்துள்ள இரண்டு கட்டங்களிலும்  தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்து வருகிறது. ஜூன் 4 -ம் தேதி  அன்று  இண்டியா கூட்டணி 300 இடங்களை தாண்டி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறி  உள்ளார்.

