மானசரோவர் செல்லும் பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
மானசரோவர் செல்லும் பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
ADDED : ஜூன் 30, 2024 11:48 PM
மாண்டியா: கர்நாடகாவில் இருந்து, மானசரோவர், சார்தாம், காசி யாத்திரை மேற்கொள்வோர் மானியம் பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, ஹிந்து அறநிலையத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில் இருந்து, மானசரோவர் செல்லும் பக்தர்களுக்கு, மாநில அரசு தலா 30,000 ரூபாய், சார்தாம் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தலா 20,000 ரூபாய் மானியம் வழங்குகிறது. காசி யாத்திரை செல்வோருக்கு, தலா 5,000 ரூபாய் மானியம் கிடைக்கும்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வோருக்கான நெறிமுறைகள்:
கர்நாடகாவில் நிரந்தரமாக வசிப்பவர்கள் மட்டுமே, இந்த சலுகையை பெற தகுதி உடையவர்களாவர்
மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்கள், மானியம் பெற விரும்பினால், அந்தந்த நிதியாண்டில் அறநிலையத் துறை கமிஷனர் நிர்ணயித்த தேதிக்குள், தேவையான ஆவணங்களுடன், 25 ரூபாய் கட்டணம் செலுத்தி, இணையதளம் அல்லது மொபைல் செயலி வழியாக, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
யாத்திரை மேற்கொள்வது குறித்து, இந்திய அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் தாக்கல் செய்வது, சீனா நாட்டுக்கு செலுத்த வேண்டிய தொகையை, பக்தர்களே ஏற்க வேண்டும்
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டை அப்லோட் செய்து விண்ணப்பிக்க வேண்டும்
45 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே, யாத்திரை செல்ல மானியம் பெற தகுதி உள்ளவர்கள். வயது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்
பக்தருக்கு ஒரு முறை மட்டுமே மானியம் கிடைக்கும். மற்றொரு முறை அதே பக்தருக்கு மானியம் கிடைக்காது
கர்நாடகாவில் இருந்து, காசி யாத்திரை செல்லும் பக்தர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் மட்டுமே மானியம் கிடைக்கும்
வயது தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்
இவர்களும் கூட ஒரு முறை மட்டுமே மானியம் பெற முடியும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.