ADDED : ஏப் 18, 2024 02:03 AM

புவனேஸ்வர், ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக், கந்தபஞ்ஜி மற்றும் பாரம்பரியமான ஹின்ஜிலி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
ஒடிசாவில் மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
இங்கு மொத்தம் 147 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் நேற்று, ஒன்பது வேட்பாளர்கள் அடங்கிய ஐந்தாவது பட்டியலை முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். இதன் வாயிலாக, சட்டசபை தேர்தலுக்கான 126 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் நவீன் பட்நாயக், போலங்கீர் மாவட்டத்தில் உள்ள கந்தபஞ்ஜி மற்றும் ஹின்ஜிலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் ஹின்சிலி மற்றும் பிஜேப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் பட்நாயக் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும் பிஜேப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

