ADDED : மே 09, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெய்ப்பூர்:நடைபாதையில் உட்கார்ந்து இருந்தவர் அதிவேகமாக வந்த கார் மோதி, அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் திரிவேணி மேம்பாலம் அருகே நடைபாதையில் பப்பு குர்ஜார் என்பவர் நேற்று முன் தினம் இரவு உட்கார்ந்து இருந்தார்.
அப்போது அதிவேகமாக தாறுமாறாக வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ கார், சாலையை விட்டு, நடைபாதையில் ஏறியது. அங்கு உட்கார்ந்து இருந்த பப்பு மீது மோதியது.
உடல் நசுங்கிய நிலையில் பப்பு குர்ஜார் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், கார் உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.