sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டசபை, மேல்சபையில் உள்ளிருப்பு போராட்டம் ஆடல், பாடலுடன் இரவை கழித்த எதிர்க்கட்சியினர்

/

சட்டசபை, மேல்சபையில் உள்ளிருப்பு போராட்டம் ஆடல், பாடலுடன் இரவை கழித்த எதிர்க்கட்சியினர்

சட்டசபை, மேல்சபையில் உள்ளிருப்பு போராட்டம் ஆடல், பாடலுடன் இரவை கழித்த எதிர்க்கட்சியினர்

சட்டசபை, மேல்சபையில் உள்ளிருப்பு போராட்டம் ஆடல், பாடலுடன் இரவை கழித்த எதிர்க்கட்சியினர்


ADDED : ஜூலை 25, 2024 10:59 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'மூடா' முறைகேட்டை கண்டித்து, மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டசபை, மேல்சபையில் எதிர்க்கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய போது, பஜனை, நடனம், பாடல் பாடியபடி இரவை கழித்தனர்.

'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த முறைகேட்டை விசாரிக்க, அரசு சார்பில் ஏற்கனவே நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குடும்பத்தினர்


ஆனால், சட்டசபையில், ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க அனுமதி தரும்படி, எதிர்க்கட்சியினர் எவ்வளவு வலியுறுத்தியும், நீதி விசாரணை நடந்து வருவதால், இங்கு விவாதிக்க அனுமதி தர முடியாது என்று சபாநாயகர் காதர் மறுத்து விட்டார்.

இந்நிலையில், முதல்வரையும், மாநில காங்கிரஸ் அரசையும் கண்டித்து, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் சட்டசபை, மேல்சபை என இரண்டு சபைகளிலும் நேற்று முன்தினம் மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம் ஆரம்பித்தனர்.

இரண்டு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இரவில் நீண்ட நேரம் விழித்து கொண்டே இருந்தனர். ஊரில் உள்ள குடும்பத்தினருடன் போனில் பேசி, நலம் விசாரித்தனர்.

சட்டசபை வளாகத்தில், செயலர், அதிகாரிகள் அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு, 'அந்தாக் ஷரி' மூலம் பாடல் பாடி மகிழ்ந்தனர். ஷிவமொகா நகர தொகுதி எம்.எல்.ஏ., சென்னபசப்பா நாடக பாடல் பாட, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் உட்பட மற்ற எம்.எல்.ஏ.,க்கள் கை தட்டி பதிலுக்கு பாட ஒரே குஷியாக இருந்தனர்.

காங்., முறைகேடு


மற்றொரு புறம் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எம்.எல்.சி.,க்களுடன் பஜனை பாடியபடி, விதான் சவுதாவை சுற்றி வலம் வந்தார்.

காங்கிரஸ் அரசின் ஒவ்வொரு முறைகேட்டையும் குறிப்பிட்டு, 'கோவிந்தா', 'கோவிந்தா' என்று கோஷம் எழுப்பியப்படி வந்தனர். முன்னாள் அமைச்சர் பிரபு சவுஹான் லம்பானி பாணியில் பாடல் பாடி நடனம் ஆடினார்.

ஒரு வழியாக நள்ளிரவு கடந்ததும், அனைவரும் சோர்வடைந்தனர். பின், ஒவ்வொருவராக துாங்க ஆரம்பித்தனர். சிலர் தரையிலும், இன்னும் சிலர் சோபா மீது படுத்தனர். இன்னும் சிலர் சட்டசபை, மேல்சபை வளாகத்திற்குள் படுத்து துாங்கினர்.

ராஜாஜி நகர் எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், முதல் நபராக அதிகாலையே எழுந்து விதான் சவுதா வளாகத்தில் நடைபயற்சி செய்தார். அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரிடம் நலம் விசாரித்து வந்தார். இதையடுத்து, ஒவ்வொருவராக எழுந்து காலை கடன்களை முடிக்க சென்றனர்.

நடை பயிற்சி


பலர் நடை பயிற்சி மேற்கொண்டனர். சிலர் உடற் பயிற்சியும் செய்தனர். பெங்களூரு எம்.எல்.ஏ.,க்கள் சிலர் வீட்டிற்கு சென்று வந்தனர். சில எம்.எல்.ஏ.,க்கள் பவனுக்கு சென்று வந்தனர். சட்டசபைக்கு வெளியே சபாநாயகர் காதர் அனைவருக்கும் சிற்றுண்டி, காபி, டீ ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், பலரும் வெளியில் சாப்பிட்டு வந்தனர். பின், சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us