ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: கார்கே பேட்டி
ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: கார்கே பேட்டி
ADDED : ஏப் 27, 2024 02:47 PM

திஸ்பூர்: நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
அசாமின் திஸ்பூரில் நிருபர்களிடம் கார்கே கூறியதாவது: பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளில், ஒன்று கூட நிறைவேற்றவில்லை. இருந்தபோதிலும், பிரதமர் மோடி நாட்டிற்கு நிறைய செய்துள்ளார் என பா.ஜ.,வினர் கூறுகிறார்கள். சுதந்திர போராட்டத்தில் காங்கிரசார் ஒரு பகுதியாக இருந்தனர். பா.ஜ.,வினர் யாரும் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடவில்லை.
காங்கிரசை சேர்ந்த மறைந்த தலைவர்களை கூட விமர்சிக்கிறார்கள். இந்திரா, சோனியா மற்றும் ராகுலையும் விமர்சிக்கிறார்கள். நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம். காங்கிரஸ் ஓடும் நதி போன்றது, சிலர் கட்சியை விட்டு வெளியேறுவதால், எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

