ADDED : மார் 02, 2025 03:21 AM

பல மாநிலங்களில் 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு தடை விதித்துள்ளனர். பீஹாரில், 20 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள நிதீஷ் குமார் அரசே பழைய வாகனம் போல் காலாவதியாகத் தான் உள்ளது. மக்களுக்கு சுமையாக மாறியுள்ள இந்த அரசை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
தேஜஸ்வி யாதவ்
தலைவர்,
ராஷ்ட்ரீய ஜனதா தளம்
தவறை தெரிந்துகொள்ளலாம்!
சமூகத்தில் நடக்கும் வன்முறைகளில் சினிமாவின் பங்கு இருக்கலாம்; அதற்காக திரைப்படங்களை இப்படித் தான் எடுக்க வேண்டும் என கூற முடியாது. சினிமாவில் காட்டப்படும் குற்றச்சம்பவங்களை பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், இதுபோன்ற செயல்கள் நல்லதல்ல என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சுரேஷ் கோபி
மத்திய இணை அமைச்சர்,
பா.ஜ.,
அழுகிய உருளை அவர்!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜியை கட்சியில் சேர்த்துக்கொள்ள பா.ஜ., தயாராக இல்லை. அவர் ஏராளமான ஊழல்களை செய்துள்ளார். அவை மம்தாவுக்கும் தெரியும். அழுகிய உருளைக் கிழங்கான அவரை நாங்கள் ஏன் சேர்த்துக்கொள்ள வேண்டும்?
சுகந்த மஜும்தார்
மத்திய இணை அமைச்சர்,
பா.ஜ.,