ADDED : ஆக 29, 2024 10:54 PM

பீதர்: தரமற்ற பணிகள் நடந்ததால், மனம் வெறுத்த கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் ஒருவர், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போதைய காலத்தில், பதவியில் இருக்கவே பலரும் விரும்புகின்றனர்.
தங்கள் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், ராஜினாமா செய்ய மனம் வருவதில்லை.
ஆனால் கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் ஒருவர், விசித்திரமான காரணத்தால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீதர், கமலாநகரின் முதோளா கிராம பஞ்சாயத்து சார்பில், 3.21 கோடி ரூபாய் செலவில் குடிநீர் திட்டப் பணிகள் நடந்தன.
ஆனால் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர், தரமாக பணிகளை தடத்தவில்லை. இதனால் சில வார்டுகளுக்கு, தண்ணீர் வரவில்லை.
இது குறித்து, கிராமத்தின் 1வது வார்டு கவுன்சிலர் சோமநாத சாமி, ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.
உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் யாரும் பொருட்படுத்தவில்லை.
இதனால் மனம் வருந்திய சோமநாதசாமி, இனியும் பதவியில் இருக்க விரும்பாமல், கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் பதவியை, நேற்று ராஜினாமா செய்தார்.

