பார்லி., விதி ராகுலுக்கு தெரியவில்லை: மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் தாக்கு
பார்லி., விதி ராகுலுக்கு தெரியவில்லை: மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் தாக்கு
ADDED : ஜூலை 07, 2024 12:19 PM

புதுடில்லி: 'ராகுல் எதிர்க்கட்சி தலைவராக மாறியிருக்கலாம். ஆனால் அவருக்கு பார்லிமென்ட் விதிகள் குறித்து தெரியவில்லை' என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறினார்.
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பார்லிமென்டில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி இருந்தார். இது குறித்து அர்ஜூன் ராம் மேக்வால் கூறியிருப்பதாவது: புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் மக்கள் பயனடைவார்கள். அவர்களின் வாழ்க்கை எளிதாகும். இ-கோர்ட், இ-சிறை, இ-வழக்கு அனைவருக்கும் உதவும்.
ராகுல் எதிர்க்கட்சி தலைவராக மாறியிருக்கலாம். ஆனால் அவருக்கு பார்லிமென்ட் விதிகள் குறித்து தெரியவில்லை. அவர் ஹிந்துக்களை வன்முறையாளர்கள் எனக் கூறுகிறார். லோக்சபாவில் ராகுல் பேசியதை நாங்கள் முழுமையாக கேட்டோம். ஆனால் எதிர்க்கட்சியினர் பிரதமர் மோடி பேசியதை கேட்கவில்லை. ஆனால் பிரதமர் மோடியின் பேச்சை நாட்டு மக்கள் அனைவரும் கேட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.