ADDED : ஆக 29, 2024 02:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயபுரா : விஜயபுராவின், ஜம்பகி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பகுதியில் அவ்வப்போது மயில்கள் உலாவும். பல நேரங்களில் வகுப்பறைக்குள் நுழைந்து, மாணவர்கள், ஆசிரியர்களை மகிழ்விக்கும்.
நேற்று மதியம் மாணவ, மாணவியருக்கு பள்ளி வளாகத்தில் உணவு பரிமாறப்பட்டது.
அப்போது அங்கு வந்த மயில், அங்குமிங்கும் நடமாடியது. மாணவர்களின் உணவு தட்டில் சாப்பிட முற்பட்டது.
இவ்வேளையில் மாணவி ஒருவர், தன் உணவுத் தட்டை மயிலுக்கு கொடுத்து விட்டு, தான் வேறு தட்டில் உணவருந்தினார்.
உணவை ஆர்வத்துடன் சாப்பிட்ட மயில், சிறிது நேரம் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு விளையாட்டு காண்பித்து விட்டு, அங்கிருந்து சென்றது. இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.

