பெங்., போக்குவரத்து நெரிசல் தீர்வு காண புதிய திட்டம்
பெங்., போக்குவரத்து நெரிசல் தீர்வு காண புதிய திட்டம்
ADDED : மே 28, 2024 06:25 AM
பெங்களூரு: பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, 'டிராபிக் மைக்ரோ சிமுலேஷன் மாடலிங்' முறையை அறிமுகப்படுத்த, நகர போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். தற்போது புதிதாக 'டிராபிக் மைக்ரோ சிமுலேஷன் மாடலிங்' முறையை அறிமுகப்படுத்த, நகர போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.
'டிராபிக் மைக்ரோ சிமுலேஷன் மாடலிங்' என்பது, மென்பொருள் அடிப்படையிலான அமைப்பாகும். எந்த விதமான போக்குவரத்து சூழ்நிலையையும் சமாளிக்கவும், தகவலை பெறவும் உதவும்.
இது குறித்து ஏற்கனவே, மாநில அரசுக்கு, போக்குவரத்து துறை முன்மொழிவை சமர்ப்பித்து உள்ளது. அரசும் ஒப்புதல் அளித்து உள்ளது.
போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அனுசேத் கூறியதாவது:
'டிராபிக் மைக்ரோ சிமுலேஷன் மாடலிங்' திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் அரசிடம் செயல் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த மென்பொருளின் விலை 4 கோடி ரூபாயாகும். இதை வெளிநாட்டில் இருந்து வாங்க வேண்டும்.
போக்குவரத்து குறைவாக உள்ள நாடுகள், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. போக்குவரத்து மேலாண்மை மையத்தில் நிறுவப்படும் இந்த மென்பொருள், எந்த போக்குவரத்து சூழ்நிலையையும் கையாள்வதற்கு உதவியாக இருக்கும். குறிப்பிட்ட இடத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டால், அருகில் உள்ள சாலைகள் மூலம் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்பதை அறியலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.