ADDED : மே 07, 2024 05:45 AM
பெங்களூரு : போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, இந்தியாவின் முக்கிய நகரங்களில், மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, டில்லியில் மெட்ரோ ரயிலில், இளம் ஜோடி முத்த மழை பொழிந்தனர்.
இதை கண்டு சக பயணியர் முகம் சுளித்தினர். சமீபத்தில் டில்லி மெட்ரோ ரயிலில், இரு இளம்பெண்கள் முகத்தில் வர்ணம் தடவி, ஹோலி கொண்டாடினர். இதற்கும் பயணியரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் பெங்களூரில் இளம் ஜோடி, மெட்ரோ ரயிலில் 'ரொமான்ஸ்' செய்து உள்ளனர். வாலிபர் நெஞ்சில், இளம்பெண் முத்தம் கொடுத்து உள்ளார். இதை ஒரு பயணி வீடியோ எடுத்து, 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
'பெங்களூரு மெட்ரோவில் என்ன நடக்கிறது. பெங்களூரு மெட்ரோவும் மெதுவாக, டில்லி மெட்ரோ போல மாறி வருகிறதா. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார். இந்த பதிவை பார்க்கும் நெட்டிசன்களும், இளம் ஜோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது மாதிரி நடக்காமல் தடுக்க, மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கோரிக்கை எழுந்து உள்ளது.